பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 8 பேர் உடல் நசுங்கி சாவு ; அதிகாலையில் நடந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 8:52 am

மகாராஷ்டிரா ; மும்பை – புனே நெடுஞ்சாலையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து புனே நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4.30 மணியளவில் மும்பை – புனே நெடுஞ்சாலையில் லோனவாலா பகுதி அருகே சென்ற போது, அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

40 பயணிகள் சென்ற பேருந்து இந்த விபத்துக்குள்ளானதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த 25 பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 493

    0

    0