மும்பையை புரட்டியெடுத்த புழுதிப்புயல்… ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி ; பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
Author: Babu Lakshmanan13 May 2024, 8:32 pm
மும்பையில் வீசியடித்த புழுதிப்புயலால் ராட்சத பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசியது. கூடவே மழையும் வெளுத்து வாங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விமான சேவை பாதிக்கப்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர். உள்ளூர் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
மேலும் படிக்க: போலீஸ் ஸ்டேசனுக்கே தீவைத்த மர்ம நபர்கள்… வழக்கு ஆவணங்களை அழிக்க சதி..? பகீர் சிசிடிவி காட்சிகள்…!!!
தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், இராட்சத விளம்பர பலகை பெட்ரோல் பங்க் மீது சரிந்து விழுந்த விபத்தில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.