ரியல் எஸ்டேட் தொழிலதிபர் படுகொலை.. துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடி : கூலிப்படையினர் ஏவிவிட்டது அம்பலம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 2:11 pm

ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்று அதிகாலை துப்பாக்கி சூடாக மாறி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள மாதாபூர் பகுதியில் இன்று அதிகாலை ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இஸ்மாயில் என்பவரை தொழில் போட்டி காரணமாக களம் இறக்கப்பட்ட சிறைக்கு சென்ற வெளியே வந்த ரவுடி சாதிக் பாட்சா மற்றும் அவனுடைய கூட்டாளிகள் மூன்று பேர் ஆகியோர் சேர்ந்து அவருடைய வீட்டின் முன் துப்பாக்கியால் சுட்டனர்.

குண்டடிபட்ட இஸ்மாயில் அங்கேயே சரிந்து மரணம் அடைந்தார். அருகில் இருந்த இன்னொரு நபர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் மரணம் அடைந்த இஸ்மாயில் உடலை தாங்கள் வந்த காரில் எடுத்து செல்ல சாதிக் பாஷாவும் அவனுடைய நண்பர்களும் முயன்றனர். ஆனால் தங்கள் முயற்சியை கைவிட்டு அவர்கள் காரில் தப்பி சென்று விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாதாபூர் போலீசார் விரைந்து சென்று இஸ்டமாயில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக உஸ்மானியா அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான ரவுடி சாதிக் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் மூன்று பேர் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!