முத்தலாக் தடை சட்டத்திற்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் ஆதரவு… வீட்டை சூறையாடிய இஸ்லாமியர்கள்…!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 6:22 pm

தெலங்கானாவில் முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய பாஜக மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் வீடு மீது இஸ்லாமியர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் தோருமாமிடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவராக பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக முகமது அன்வர் இன்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி சிறுபான்மையினர், முகமது அன்வர் வீடு மீது தாக்குதல் நடத்தினர். அவர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவர் மசூதிக்கு நன்கொடையாக கொடுத்த பொருட்களை அவருடைய வீட்டருகே போட்டு உடைத்து சேதப்படுத்தினர்.

தொடர்ந்து முகமது அன்வர் மசூதிக்கு உள்நுழையவும் தடை விதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து முகமது அன்வர் விகாரபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?