போலீஸ் பாதுகாப்பை மீறி திருப்பதி மலையில் நள்ளிரவில் அதிவேகத்தில் சென்ற மர்ம கார் : விடாமல் துரத்திய விஜிலென்ஸ்.. தாக்குதல் நடத்த திட்டம்?!
Author: Udayachandran RadhaKrishnan3 November 2022, 12:45 pm
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கடும் பாதுகாப்பையும் மீறி நள்ளிரவு 12 மணிக்கு திருப்பதி மலையை நோக்கி பயணித்த மர்ம காரை ஜீப்பில் தொடர்ந்து விரட்டி சென்ற தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர்.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருப்பதி மலை அடிவாரத்திற்குவந்த கார் ஒன்று சோதனை செய்வதற்கு கூட நிறுத்தாமல் திருப்பதி மலையை நோக்கி வேகவேகமாக ஓட்டி செல்லப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் எதிர்கொள்ள வசதியாக அங்க தயார் நிலையில் இருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அந்த காரை தங்களுடைய ஜீப் மூலம் தொடர்ந்து விரட்டி சென்றனர்.
ஆனால் வேகமாக சென்ற அந்த கார் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது காரில் யாரும் இல்லை. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி விஜிலென்ஸ் துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக திருப்பதி, திருமலையில் இருந்து போலீசாரும், தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் எதிர்கொள்ள தயார் நிலையில் திருப்பதி மலையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆக்டோபஸ் படையினரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் நான்கு பேரை திருப்பதி திருமலை இடையே அடர்ந்த காட்டுக்குள் இருந்து பிடித்த போலீசார் அவர்களை திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிஜினல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0