கொரோனாவை அடுத்து மீண்டும் பரவும் மர்ம காய்ச்சல்.. குழந்தைகளுக்கு மட்டும் குறி? சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 9:04 pm

கொரோனவை அடுத்து மீண்டும் பரவும் மர்ம காய்ச்சல்.. குழந்தைகளுக்கு மட்டும் குறி? சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!!

கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே உலக மக்களே தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். அப்படி ஒரு பாதிப்பை அந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸை உருவாக்கியதே சீனா தான் என்றொரு விவாதம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, ஆனால், அந்நாடு அதை மறுத்து வந்தது. ஆனால், சீனாவில் இருந்து தான் ஒட்டுமொத்த உலகுக்கும் அந்த கொடிய நோய் பரவியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஏராளமான உயிரிழப்புகள், உடல்நல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் என்று பெரும் துயர் நிலையில் இருந்து, தடுப்பூசி மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளின் மூலமாக உலக நாடுகள் மீண்டு வந்து இப்போதுதான் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்படியொரு சூழலில், மீண்டும் மிகப்பெரும் நோய்க்கான தொற்று மையமாக சீனா உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மாகாணங்களில் நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறதாம்.

கடந்த ஒரு வாரத்தில் இந்த நிமோனியா பாதிப்புகள் குறித்து வெளியான பல செய்திகளை மையமாக வைத்து சீனாவிடம் உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிக்கை கேட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சீனாவில் மூச்சுத்திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் நிமோனியா காய்ச்சல் தென்படுமாம். இதில் எண்ணற்ற மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் முன் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்தை பேண வேண்டும் என்றும், மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் உலக நாடுகளில் பரவும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். இது குறித்து இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், சீனாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் அந்த நோய் இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், எந்தவொரு அவசர சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்தியா தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • bismi said that good bad ugly movie genre is dark comedy குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..