இரவு நேரத்தில் வானில் நகர்ந்து சென்ற மர்மமான ஒளிகள்… மக்களை மிரள வைத்த அதிசயக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 6:07 pm

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் வானத்தில் நேற்று இரவு மர்மமான ஒளியை மக்கள் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு அவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோக்களில் புள்ளி வடிவிலான தொடர்ச்சியான வெள்ளை ஒளி வானத்தில் தென்படுவதை பார்க்க முடிகிறது.

அந்த ஒளி அசைந்து செல்வதை பார்க்கும் போது ரெயில் ஒன்று நகர்ந்து செல்வது போல் இருந்ததாக அதை பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இதை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ள பலர் இது பற்றி யாராவது விளக்கம் அளிக்க முடியுமா என கேட்டு வருகின்றனர்.

இது தொடர்பான பதிவுகளில் மக்கள் நாசா, இஸ்ரோ மற்றும் எலான் மஸ்க் போன்றோர்களையும் டேக் செய்து விளக்கம் கேட்டு வருகின்றனர்.

  • Ajithkumar Vidaamuyarchi box office in Bihar பீகாரில் மாஸ் காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் முந்தைய சாதனைகள்!