ரூ.21 லட்சத்தை திருடி விட்டு ஐ லவ் யூ என எழுதி வைத்து சென்ற மர்மநபர்கள் : அதிர்ச்சியில் உரிமையாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 10:17 pm

கோவா : ரூ. 21.5 லட்சத்தை திருடிவிட்டு, ஐ லவ் யூ என்று எழுதிச் சென்றதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கோவாவில் மார்கோவ் நகரில் வசித்து ஆசிப் செக் என்பவர் வசித்து வருகிறார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மார்கோவ் நகர் ஆசிப் செக் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மொத்தமாக ரூ. 21.5 லட்சம் திருடு போயிருப்பதாக காவல்துறையிடம் ஆசிப் தெரிவித்துள்ளார்.

வீட்டில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று காவல்துறையினர் தேடிய போது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில் ஒரு மார்க்கரைப் பயன்படுத்தி திருடர்கள் “ஐ லவ் யூ” என்று எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஆசிப் செக் அதிர்ச்சியடைந்தார்.

அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வீடு புகுந்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம், என்று இன்ஸ்பெக்டர் சச்சின் நர்வேகர் தெரிவித்தார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!