நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை : எந்தெந்த பொருட்களுக்கு தடை? விபரத்தை வெளியிட்ட மத்திய அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 6:22 pm

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், தற்போதுள்ள வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பலூன் குச்சிகள், சிகரெட் பொதிகள், தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், தட்டுகள் உள்ளிட்ட கட்லரி பொருட்கள், இயர்பட்ஸ், இனிப்பு பெட்டிகள், அழைப்பு அட்டைகள் போன்றவை தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!