சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி… 34 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.. உச்சநீதிமன்றம் அதிரடி

Author: Babu Lakshmanan
19 May 2022, 3:29 pm

டெல்லி : பஞ்சாப் காங்., மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராவார். இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.

இவர், கடந்த 1988ம் ஆண்டு நடந்த சாலை விபத்து தொடர்பான பிரச்சனையில் குர்னம்சிங் என்ற முதியவரை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்திருந்தார்.

சித்துவின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அவரது மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தது. இதனால், அவர் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிப்பது உறுதியாகியுள்ளது. இது காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி