நெருங்கும் தேர்தல்.. உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கை : தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 2:38 pm

நெருங்கும் தேர்தல்.. உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கை : தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் கூறிய நிலையில், அவருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் உட்பட மொத்தம் 33 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தலைமை தேர்தல் ஆணையர் இல்லத்தில் ஆயுதமேந்திய 10 காவலர்களும், 24 மணி நேரமும் பாதுகாப்பை வழங்க 6 தனி அதிகாரிகளும் (பிஎஸ்ஓக்கள்), அதேசமயம் ஆயுதமேந்திய கமாண்டோக்கள் 12 பேர் 3 ஷிப்டுகள் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு ஷிப்டுக்கு 2 கண்காணிப்பாளர்கள், 3 ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!