நெருங்கும் தேர்தல்.. உளவுத்துறை கொடுத்த தகவல் : பிரசாந்த் கிஷோரிடம் தஞ்சமடைந்த முதலமைச்சர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 9:28 am
PK - Updatenews360
Quick Share

நெருங்கும் தேர்தல்.. உளவுத்துறை கொடுத்த தகவல் : பிரசாந்த் கிஷோரிடம் தஞ்சமடைந்த முதலமைச்சர்!!!

தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், சந்திரசேகர ராவின் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

அதாவது பொதுவாக தேர்தலுக்கு முன்னர் உளவுத்துறை ஆளும் கட்சிக்கு ஒரு அறிக்கையை கொடுக்கும். அதில் மாநில மக்களின் ஆதரவு ஆட்சிக்கும், கட்சிக்கும் எவ்வாறு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படிதான் தற்போது தெலங்கானாவில் மக்களின் மனநிலை, ஆளும் கட்சிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்த உளவுத்துறை அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அதில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை சரிகட்ட தான் பிரசாந்த் கிஷோரை கட்சி நாடியிருக்கிறது. அம்மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் இருக்கின்றன.

எனவே இந்த குறுகிய நேரத்தில் பிரச்னைகளை சரி செய்ய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமாராவ் ஆகியோர் பிரசாந்த் கிஷோரிடம் நேற்று முன்தினம் 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை சமூக ஆர்வலரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான குருராஜ் அஞ்சன் கூறியுள்ளார். இது அந்த மாநிலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 311

    0

    0