தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தைகள், பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (அக்.16) மாலை மெதக் மாவட்டம், சிவம்பேட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கியதில், நிலைத்தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.
பின்னர் கண்ணிமைக்கும் நொடியில் அருகில் இருந்த ஏரிக்கால்வாயில் நான்கு முறை கார் அடுத்தடுத்து பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், காரில் பயணித்த சாந்தி (38), அம்மு (12), சீதாராம் தாண்டாவைச் சேர்ந்த அனிதா (3), இந்து (35), ஷ்ரவாணி (13), தலபள்ளி தாண்டாவைச் சேர்ந்த சிவராம் (12), துர்கி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : பாலம் அமைச்சு கொடுங்க.. ஆபத்தான பயணத்தில் திருவள்ளூர் கிராமத்தினர்..
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0
0