நாளை நாடு முழுவதும் தொடங்குகிறது நீட் தேர்வு : தேர்வர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்வு முகமை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 8:49 pm

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

2023-24-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

இவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு எழுதும் மையத்துக்கு வரலாம் என்றும், பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும் என்றும், 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து இருக்கிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?