ஆசையோடு வாங்கிய புதிய பேட்டரி பைக் : BEDROOMல் சார்ஜ் போட்டு தூங்கும் போது வெடித்து விபத்து.. சிதைந்து போன குடும்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 4:47 pm

ஆந்திரா : சார்ஜ் செய்யும்போது மின்சார பைக் பேட்டரி வெடித்து கணவன் பலி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா சூர்யாராவ்பேட்டை அருகே குலாபி தோட்டப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சிவகுமார். நேற்று முன்தினம் அவர் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் பைக் ஒன்றை வாங்கினார்.

புதிதாக வாங்கிய பைக்கை வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் போட்டு சிவகுமார், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இரவு தூங்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் சிவக்குமார் மரணம் அடைந்த நிலையில், அவருடைய மனைவி 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இருந்து வெளியான புகையை சுவாசித்து அவருடைய இரண்டு குழந்தைகளும் கவலைக்கிடமான நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி விஜயவாடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!