டெல்லி அரசுக்கு புதிய நெருக்கடி… சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு கடிதம் : கெஜ்ரிவால் வற்புறுத்தியது அம்பலம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
18 டிசம்பர் 2022, 8:14 மணி
aam Admi Vs Sukesh -updatenews360
Quick Share

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு, ‘பாதுகாப்பு அளிப்பதற்காக’ ரூ.10 கோடி கொடுத்ததாக, டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு, சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சுகேஷ், ஆம் ஆத்மி கட்சி தலைவரை தனக்கு 2015-ம் ஆண்டு முதல் தெரியும் என்று எழுதி உள்ளார். தென்னிந்தியாவில் அவருக்கு முக்கியமான கட்சி பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதால், ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ.50 கோடி வழங்கியதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், பா.ஜ.க.வுக்கு எதிராக பேசும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டேன் என்று கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு எதிராக புதிதாக எழுதியுள்ள கடிதத்தில் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தல் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளை குறிப்பிட்டு சுகேஷ் எழுதியுள்ள புதிய கடிதம் ஒன்றில், இது உங்களுடைய அரசியல் முடிவுக்கான தொடக்கம் மட்டுமே.

நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். உங்களுடைய உண்மையான நிறம் அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு விசயங்களையும் வெளிப்படையாக்குவேன் என அச்சுறுத்தும் வகையில் தெரிவித்து உள்ள சுகேஷ், அந்த கடிதத்தில், தன்னை யாரும் இந்த கடிதம் எழுதும்படி நெருக்கவில்லை என்றும் அந்த கடிதங்களை எல்லாம் சொந்த விருப்பத்தின் பேரிலேயே எழுதியுள்ளேன் என்றும் சுகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று கடிதத்தில், கெஜ்ரிவாலுக்கு எதிராக கடிதம் எழுத பா.ஜ.க. நெருக்கடி கொடுத்தது என்று கவர்னர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதும்படி, தன்னை கெஜ்ரிவால் வற்புறுத்தினார் என்றும் சுகேஷ் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 397

    0

    0