இலவச தரிசன டோக்கன் மீண்டும் விநியோகம் : விஐபி பிரேக் தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு : திருப்பதி பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 3:54 pm

நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் திருப்பதி மலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதற்கு வசதியாக 54 லட்சம் ரூபாய் செலவில் ஷெட் ஒன்று கட்டப்பட்டது.

அதனை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இன்று காலை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.

எத்தனை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு வழங்குவது என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம். அதே போல் காலை 6:00 மணிக்கு தினமும் துவங்கும் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரத்தை காலை 8 அல்லது 8:30 மணியாக மாற்றி அமைக்கவும், டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அப்போது கூறினார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…