‘எனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும்’…பலாத்கார வழக்கில் திருப்பம்: நடிகர் திலீப்பால் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு..!!

Author: Rajesh
16 February 2022, 11:40 am

கேரளா: நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நடிகர் திலீப் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக திலீப் உள்பட 6 பேர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கிலும் திலீப் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்கப்பதிவு செய்துள்ளனர்.

சதிதிட்டத்தை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், என்மீது பதிவு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீகுமார் ஆஜரானார்.

இந்த வழக்கில் நடிகையையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் இந்த வழக்கில், நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் நடிகை தரப்பிலும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வருகிற 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!