ஆபாச வீடியோவால் புதிய சிக்கல்.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு செக் வைத்த எஸ்ஐடி.. பறந்த NOTICE!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 9:40 am

ஆபாச வீடியோவால் புதிய சிக்கல்.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு செக் வைத்த எஸ்ஐடி.. பறந்த NOTICE!

முன்னாள் பிரதமர் தேவகவுடா தற்போது எம்பியாக உள்ளார். ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக உள்ள தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்எல்ஏவாக உள்ளார்.

அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்பியாக உள்ளார். தற்போது பாஜக கூட்டணியில் உள்ள மீண்டும் அதே தொகுதியில் பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார்.

இதனிடையே தான் பிரஜ்வல் பணிப்பெண்ணை மிரட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீடியோ மட்டுமல்லாமல், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை என்பது பூதாகரமாகி உள்ளது. இதையடுத்து பிரஜ்வெல், ஜெர்மனிக்கு எஸ்கேப் ஆகியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்த நிலையில் எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணாவுக்கு எஸ்ஐடி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதாவது பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்களின் வீட்டில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியர் ஹோலேநரசிப்புரா போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது 354ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடருதல்), 506 (மிரட்டுதல்), 509 (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: செல்போனை மட்டும் திருடும் விசித்திர திருடன்..நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து துணிகரம்..ஷாக் CCTV!

இந்த வழக்கில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்ஐடி சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா, ரேவண்ணா ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது பிரஜ்வல் மற்றும் ரேவண்ணா ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரஜ்வல், ஜெர்மனியில் உள்ளதால் அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவர் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…