கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு வைத்த ‘செக்’..!!
Author: Rajesh13 April 2022, 10:08 pm
புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்கைக்கு புதிய தடை விதித்து அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் 21ம் தேதி உடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டு முதல் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது 6 ஆக இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்து. இதனிடையே எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து கேந்திரிய பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தங்கள் தொகுதிகளில் இருந்து தலா 10 மாணவ இடங்களுக்கு பரிந்துரை செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எம்.பி.க்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0