பக்தர்கள் திருப்பதிக்கு வர புதிய கட்டுப்பாடு : புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 2:11 pm

திருப்பதியில் 6 கிலோ மீட்டர் வரிசையில் சாமி தரினத்திற்காக பக்தர்கள்.
35 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நாளை புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு 35 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண தரிசத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று கொண்டுள்ளனர்.

நாளை புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஆகையால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு குடிநீர், டீ, காபி ஆகிய உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்க உள்ளாகி வருகின்றனர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது .

நேற்று ஒரே நாளில் 72 ஆயிரத்து 192 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 17 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

  • Rachitha Fire movie glamour role சீரியலில் அம்மணி…சினிமாவில் திறந்தமேனி…’FIRE’ படத்தின் பாடலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!