தாய்நாட்டில் உள்ள இந்து எதிர்ப்பு அமைப்புகளால் நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார் : ஐ.நா சபையில் சிஷ்யை பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 2:16 pm

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார். ஆனால் அந்த நாட்டின் சரியான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19 வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடைபெற்றது.

இதில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக மா.விஜயபிரியா நித்யானந்தா கலந்து கொண்டார். அங்கு பேசும் போது அவர் நித்யானந்தா தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வேண்டுமென்றே திரிக்கபட்டு உள்ளது என்றும் ஊடகங்களின் சில இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது” என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி உள்ளார்.

மேலும் பகவன் நித்யானந்தா பரமசிவம் தனது தாய்நாட்டில் சில இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று நான் கூறினேன் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்கா கைலாசா இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது மற்றும் இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது. எங்கள் கவலை அந்த இந்து எதிர்ப்பு ஒரு விஷயத்தை நோக்கி மட்டுமே வழிநடத்தப்படுகிறது.

இந்து மதம் மற்றும் கைலாசாவின் மிகச்சிறந்த தலைவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இத்தகைய கூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறி உள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 518

    0

    0