பிரச்சார மேடையில் பேசும் போது மயங்கி விழுந்த நிதின் கட்கரி : மருத்துவமனையில் அனுமதி.. ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 5:59 pm

பிரச்சார மேடையில் பேசும் போது மயங்கி விழுந்த நிதின் கட்கரி : மருத்துவமனையில் அனுமதி.. ஷாக் VIDEO!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். புசாத் நகரில் நடந்த பேரணியின் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்து வந்த போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக, மேடையில் மயங்கி விழுந்தார்.

மயங்கி விழுந்த நிதின் கட்கரிக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி அளித்த பின்னர், பின்னர் நலமுடன் தனது பிரச்சார பணிகளை தொடர்ந்தார். இது குறித்து நிதின் கட்கரி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

p> மேலும் படிக்க: திமுக எம்எல்ஏ மனைவிக்கு மட்டும் எப்படி? தேர்தல் ஆணையம் ஆதரவா? BJP சூர்யா சிவா கேள்வி!!

அதில், தான் வெயிலின் தாக்கம் காரணமாக மேடையில் அசௌகரியமாக உணர்ந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், அடுத்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள கிளம்புகிறேன், உங்கள் அன்புக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 338

    0

    0