எந்த மொழியையும் திணிக்கக்கூடாது, மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2022, 8:11 pm
சென்னை: எந்த மொழியையையும் திணிக்கக் கூடாது! என்று சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்புவிழாவில் கலந்து கொண்ட இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்
சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி துணை ஜனாதிபதியை வரவேற்று பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு மேலும் பேசியதாதவது, ‘ கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார். இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தன் தரப்பு கருத்தினை முன்வைப்பதில் கருணாநிதி தனித் திறன் படைத்தவர்.
நம் தாய்மொழி கண் போன்றது. எனவே நம் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். எந்த ஒரு மொழியையும் திணிக்கக் கூடாது. எதிர்க்கவும் கூடாது. தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. மாநிலங்களின் முன்னேற்றம் இல்லாமல் நாடு வளர்ச்சி பெற முடியாது.சிற்பக் கலையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கருணாநிதியின் இச்சிலை உயிரோவியமாக விளங்குகிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்
கருணாநிதி சிறந்த நிர்வாகி, சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், இலக்கியவாதி, கவிஞர், படைப்பாளி பத்திரிக்கையாளர் என பன்முக தன்மை கொண்டவர். திரையுலகமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதில் கோலோச்சியவர் கருணாநிதி. எமெர்ஜென்சி கொண்டு வரப்பட்ட போது அதை முழு மூச்சோடு எதிர்த்தவர்.கருணாநிதி கைது செய்யப்பட்ட நேரத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் பேசினேன். உடனடியாக கருணாநிதி இருக்கும் இடம் ஓடி வந்தேன்.