இனி பார்சல் வீட்டுக்கு வராதா? சொமேட்டோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு : விழிபிதுங்கும் ஊழியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 5:54 pm

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனத்தில் ஒன்று சொமேட்டோ நிறுவனம்.

தற்போது இந்த நிறுவனம் 3 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறைந்தது 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செயல்முறை கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது என்று சொமேட்டோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் சொமேட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.2.51 பில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டின் ரூ.4.30 பில்லியன் இழப்பு தொகையை விட நிகர இழப்பு வெகுவாக குறைந்துள்ளதை காட்டுகிறது. மேலும், சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய் ரூ.10.24 பில்லியனில் இருந்து ரூ.16.61 பில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சொமேட்டோ ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று சொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மோஹித் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்… 
  • Close menu