NDA வேண்டாம்… INDIA கூட்டணியும் வேண்டாம் : லோக்சபா தேர்தலில் மாயாவதி தனித்து போட்டி என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 2:29 pm

NDA வேண்டாம்… INDIA கூட்டணியும் வேண்டாம் : லோக்சபா தேர்தலில் மாயாவதி தனித்து போட்டி என அறிவிப்பு!!

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மாயாவதி அறிவித்திருக்கிறார். இவரின் அரசியில் நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

அதாவது இவர் தனித்து நிற்பதால் வாக்குகள் பிரிந்து அது பாஜகவுக்குதான் சாதகமாக போகும் என்று கூறியுள்ளனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோகன் பிரசாத் குப்தாவும், பாஜக சார்பில் குசும் தேவியும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் குசும் தேவி, 70,053 வாக்குகள் வெற்றி பெற்றார். அதே சமயம் காங்கிரஸின் மோகன் பிரசாரத், 68,259 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 1,794 தான்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுக்கு ஆதரவளிக்காமல் தனித்து போட்டியிட்டது. அதேபோல அசாதுதீன் ஓவையின் கட்சியும் தனித்து களமிறங்கியது. இருவருக்கும் முறையே 8,853 மற்றும் 12,214 வாக்குகள் கிடைத்தன.

இது குசும் தேவிக்கும் மோகன் பிரசாத் குப்தாவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். இதுபோன்ற பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, பகுஜன் சமாஜ் கட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

முன்னதாக மாயாவதி உண்மையிலேயே பாஜகவை எதிர்ப்பதாக இருந்தால் அவரது பகுஜன் சமாஜ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் திவாரி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!