டாடா அறக்கட்டளை தலைவராக ரத்தன் டாடா சகோதரர்.. யார் இந்த நோயல் டாடா?

Author: Hariharasudhan
11 October 2024, 3:13 pm

டாடா அறக்கட்டளை தலைவராக இருந்த ரத்தன் டாடா உயிரிழந்த நிலையில், அதன் புதிய தலைவராக அவரது சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை: இந்தியாவின் மிக முக்கிய முன்னணி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் டாடா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சில வருடங்கள் டாடா குழும தலைவராக இருந்தவர் ரத்தன் டாடா. இந்த காலக்கட்டத்தில் பல உற்பத்தி பொருட்கள் ஏழை, நடுத்தர மற்றும் பணக்கார என அனைத்தையும் பூர்த்தி செய்தது.மேலும், அவரது பேச்சுகள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது அவர் வைத்திருந்த நேசம் இந்தியாவின் அனைவரிடத்திலும் அவரைக் கொண்டு சேர்த்தது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை சாதாரண வயோதிக பரிசோதனைக்காக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கபட்டார். பின்னர், புதன்கிழமை திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், அன்று நள்ளிரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது உடல் அவர் சார்ந்த பார்சி சமூக கலாச்சார முறைப்படி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, இறுதியாக அவர் பொறுப்பு வகித்து வந்த சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் டோராப்ஜி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதில் மாயா டாடா என்ற அவரது சகோதரர் மகள் பெயர் அதிகளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா (Noel Tata) டாடா குழுமத்தின் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு, இன்று மும்பையில் நடைபெற்ற வாரிய கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வேணு ஸ்ரீனிவாசன், விஜய் சிங்மற்றும் மெஹில் மிஸ்த்ரி ஆகிய அறக்கட்டளை செயல் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும், ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் தனது குடும்ப வணிகத்தில் இருந்து விலகி, தெற்கு முமபியின் கோலபாவில் இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட சொகுசு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: அதுலாம் எனக்கு ஜுஜூப்பி.. மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

மேலும், நோயல் டாடா, கடந்த 2000ஆம் ஆண்டில் நிறுவனத்த்தில் இணைந்தது முதல், டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் வாட்ச் கம்பெனியின் துணைத் தலைவராகவும் நோயல் டாடா உள்ளார். அது மட்டுமல்லாமல், இவரது தாயார் சைமன் டாடா, டிரெண்ட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் டாடா இண்டர்நேஷ்னல் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ரத்தன் டாடாவிற்கு 10 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் நாவல் மற்ற்ம் சோனி டாடா ஆகியோர் பிரிந்தனர். அதற்குப் பிறகு அவர் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 424

    0

    0