கார்கேயின் வெற்றியல்ல… காங்கிரசுக்கான வெற்றி : மாற்றத்திற்காக போட்டியிட்டேன் மாறிவிட்டது… சசி தரூர் ஹேப்பி!!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2022, 6:46 pm
டெல்லியில் நிருபர்களை சந்தித்த சசிதரூர் கூறியதாவது : காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கார்கேவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். புதிய தலைவர் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாடு வலிமையாக இருக்க வலிமையான காங்கிரஸ் தலைவர் தேவை. தேர்தலில் அதிருப்தியில் போட்டியிடவில்லை. மாற்றத்திற்காகவே போட்டியிட்டேன்.
கார்கேவின் வெற்றி காங்கிரசின் வெற்றி. எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக சவாலை சந்திக்க தயாராக உள்ளோம். பா.ஜ.கவை எதிர்க்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கார்கே வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன். அவர் கட்சியின் மூத்த தலைவர். கட்சியை வழிநடத்தி செல்வார். ஆயிரம் பேர் எனக்கு ஓட்டளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தொண்டர்கள் தான் உண்மையான பெருமிதம்.
கார்கேயின் வெற்றி காங்கிரசின் வெற்றியாக கருத வேண்டும். இந்த தேர்தல் தனிப்பட்ட நபரை சார்ந்தது அல்ல. கட்சிக்கானது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன். வலிமையான காங்கிரஸ்தான். நாட்டிற்கு தேவை. இவ்வாறு சசி தரூர் கூறினார்.