ஒரு தொகுதியையும் கூட விட்டுத்தரக் கூடாது.. மம்தா பானர்ஜி கண்டிஷன் : இண்டியா கூட்டணியில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 10:02 pm

ஒரு தொகுதியையும் கூட விட்டுத்தரக் கூடாது.. மம்தா பானர்ஜி கண்டிஷன் : இண்டியா கூட்டணியில் சலசலப்பு!!

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட விடமாட்டோம் என்றும், அனைத்து தொகுதியிலும் இந்தியா கூட்டணி போட்டியிடும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:- இந்தியா கூட்டணிக்கு திட்டம் எதுவும் இல்லை. தலைமையும் கிடையாது. நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதியிலும் இந்தியா கூட்டணி போட்டியிடும்.

மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியினை தராமல் காலம் தாழ்த்துகிறது. குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. எனினும் மக்களுக்காக மாநில அரசு இதனை தொடர்ந்து செய்து வருகிறது என அவர் கூறினார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!