நோயாளியை உற்சாகப்படுத்த சினிமா பாடலுக்கு நடனமாடிய செவிலியர்கள் : உடனே நடந்த MEDICAL MIRACLE…நெகிழ்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 1:57 pm

தெலுங்கானா : மருத்துவம் செய்யாததை இசை மற்றும் நடனம் செய்த அதிசயமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலம் கொல்ல பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கல்லீரல் வியாதி , மஞ்சள் காமாலை தொற்று மற்றும் மூளைக்கு ஆக்சிசன் செல்லாத காரணத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கை , கால்கள் செயலிழந்த நிலையில் கரீம் நகர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 25 நாட்களாக ஸ்ரீநிவாஸ்க்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தபோதிலும் உடல்நிலையில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இதனால் புதிய முறையை கையாள நினைத்த மருத்துவர்கள் இசை மற்றும் நடனம் வாயிலாக ஸ்ரீநிவாசை உற்சாகப்படுத்த நினைத்தனர்.

இதை அடுத்து நோயாளி ஸ்ரீநிவாஸ் முன்னிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தெலுங்கு பாடல்களுக்கு பாட்டு பாடி நடனமாடி அவரை உற்சாகப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கை கால்கள் முழுவதுமாக செயலிழந்த ஸ்ரீனிவாஸ் தற்போது மெல்ல மெல்ல உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து கால்களை அசைத்து வருவது ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…