ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து… வேகமாக சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு… அதிர்ச்சியில் மக்கள்..!!
Author: Babu Lakshmanan5 June 2023, 2:54 pm
ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 275 பேர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு இத்தாலி, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கோர விபத்து நடந்த 3 நாட்களுக்குள் மற்றொரு ரயில் தடம்புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பர்கார் பகுதியில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வனப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்ட வடு ஆறுவதற்குள், தற்போது மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.