எம்எல்ஏக்களுடன் பாலியல் உறவு… பிளாக்மெயில் செய்து கோடிஸ்வரியான 26 வயது பியூட்டி பார்லர் அழகி… கணவனுக்கும் சேர்த்து கடிவாளம் போட்ட போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 6:06 pm

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பணம் படைத்தவர்களுடன் பாலியல் உறவு வைத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த அழகியை போலீசார் கைது செய்தனர்.

ஓடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா நாக். 26 வயதான இவர் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராவார். குடுமப சூழல் காரணமாக புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்த இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அங்கிருந்து பியூட்டி பார்லரில் வேலைக்கு சேர்ந்தார்.

பார்லரில் வேலை பார்த்து வந்த போது, கடந்த 2018ம் ஆண்டு ஜெகபந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். பழைய கார்களை விற்கும் ஷோரூம் ஒன்றை நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பணக்காரர்களாக வேண்டும் என்று திட்டம் தீட்டினர். அழகு நிலையத்தில் வேலை பார்த்த போதே, அர்ச்சனா பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஜெகபந்துவுக்கு பழக்கமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க செய்து, அதனை புகைப்படம், வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினர்.

ஒடிசாவின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பணம் பறித்து நான்கே ஆண்டுகளில் ரூ.30 கோடி வரை சுருட்டியுள்ளார் அர்ச்சனா.

திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், அர்ச்சனா – ஜெகபந்து மீது அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அப்போதுதான், இவர்களின் மோசடித்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. கணவருடன் சேர்த்து அர்ச்சனாவை போலீசார் கைது செய்ததுடன், 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

26 வயதே ஆன பெண் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களை பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கான ரூபாயை சுட்டியது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜாமீன் கோரி அர்ச்சனா நாக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 560

    0

    0