ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜுன் 2ம் தேதி இரவு 7 மணியளவில் ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர். முதலில் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என தெரியாத நிலையில், பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோதியது தெரிய வந்தது.
இந்த விபத்தினால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 278 பேர் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே சட்டம் 153,154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சிபிஐ குழு இன்று விசாரணையை தொடங்கி உள்ளது. விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும், மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.