ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆஃபர் : திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 4:39 pm

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் நாளை 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட் ஒன்று வழங்கப்படும்.

இந்த நிலையில் இம்மாதம் இரண்டாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் நாளை சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும் டிக்கெட் கட்டணமாக தலா 300 ரூபாயில் செலுத்தி பக்தர்கள் அவற்றை தேவஸ்தானத்தின் இணையதளமான http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளாலாம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி