நாட்டு நாட்டு பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய அதிகாரிகள் : வீடியோவை பார்த்து ஆடிப்போன பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 2:04 pm

கடந்தாண்டு ராஜமவுலி இயக்கத்தில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்ட இப்படம் உலகளவில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அப்படத்தின் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன.

குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பி வருகிறது.

இப்பாடலுக்கு விருதுகளும் குவிந்து வருகின்றன. உலகின் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது இப்பாடலுக்கு கிடைத்திருந்தது. சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டு இருந்தது.

இதுமட்டுமின்றி உலகளவில் மிக உயரிய சினிமா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக இறுதி நாமினேஷன் பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்று உள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர் ராம்சரண் ஆகியோர் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ள வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வந்தது.

டுவிட்டரில் சுமார் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி தென் கொரிய தூதரக பணியாளர்களின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 392

    0

    0