அடடே.. அடுத்த விக்கெட் காலி.. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல் : பாஜகவில் சேரும் முக்கிய பிரமுகர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 9:09 pm

அடடே.. அடுத்த விக்கெட் காலி.. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல் : பாஜகவில் சேரும் முக்கிய பிரமுகர்..!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி தாவலில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு அண்மை நாட்களாக பிரபலங்கள் தாவி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருக்கும் ராணா கோஸ்வாமி இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

அவர் வகித்த தலைவர் பதவியை ராஜினாமா செய்தும் உள்ளார். இது குறித்து அவர் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அனுப்பி உள்ளார்.

மேலும், புதுடெல்லிக்கு சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பா.ஜ.கவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர், அசாம் ஜோர்ஹாட்டின் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?