2 லைட்டு, ஒரு FAN-க்கு ரூ.1 லட்சம் மின்கட்டணமா..? இலவச மின்சாரமும் போச்சு… கதிகலங்கி நிற்கும் மூதாட்டி..!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 12:45 pm

2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறியும் உள்ள வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணமாக வந்திருப்பதை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டம் பாக்யா நகரைச் சேர்ந்தவர் கிரிஜாம்மா. இவரது வீட்டில், 2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறி மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு அதிகப்பட்சமாக 200 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கிரிஜாம்மாவின் வீட்டில் புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு அந்த மாதத்தில், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 96 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்தார்.

இதனை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், புதிய டிஜிட்டல் மீட்டரின் ஏதேனும் கோளாறாக இருக்கலாம் எனக் கருதி, வேறு ஒரு டிஜிட்டல் மீட்டரை பொருத்திச் சென்றனர்.

இருப்பினும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 315 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. மின் கட்டணம் அதிகமாக வருவதால், மின் இணைப்பை துண்டிக்கப்போவதாக மின்வாரிய ஊழியர்கள் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதன்மூலம், தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சார சலுகையை பெறும் தகுதியையும் கிரிஜாம்மா இழந்துள்ளார். இதனால், என்ன நடப்பது என்றே புரியாத கிரிஜாம்மா, வேதனையின் உச்சியில் உள்ளார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!