ஓணம் சேலை அணிந்து பண்டிகையை கொண்டாடிய ஆண் காவலர்கள்… வைரலாகும் திருவாதிரை நடனம்..!!
Author: Babu Lakshmanan29 August 2023, 3:59 pm
காக்கி உடையை அவிழ்த்து ஒண சாரி உடுத்தி ஓண பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய கொடுங்கல்லூர் காவல் நிலைய ஆண் காவலர்களின் திருவாதிரை நடனம் வைரலாகி வருகிறது.
கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓண பண்டிகையை – கேரள மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் காவல் நிலையத்தை சார்ந்த ஆண் காவலர்கள் ஒண புடவை அணிந்து, பெண்களைப் போல் வேடமிட்டு காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஓண பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒண நடனமான திருவாதிரை நடனம் ஆடி அசத்தினர்.
காக்கி உடையை அவிழ்த்து புடவை சுத்தி கண்ணில் கூலிங் கிளாஸ் வைத்து ஆட்டம் ஆடி அதிர வைத்த ஆண் காவலர்களின் நடனம் தற்போது சமூக வலைதளங்களிலும் மிகவும் வரைலாகியும் வருகிறது.