இந்தியாவிற்கு மேலும் ஒரு புதிய விமானம் : பிரபல தொழிலதிபரின் விமானத்திற்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 8:52 pm

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ஆகாசா ஏர் விமானம் நிறுவனத்திற்கு, வர்த்தக ரீதியான விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இவர் இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அது மட்டுமின்றி மூன்றுக்கும் மேற்பட்ட வங்களின் பங்குதாரராகி உள்ளார்.

இந்நிலையில் ஆகாசா ஏர் விமான நிறுவனம், வர்த்தக ரீதியான விமான போக்குவரத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அதற்கான ஒப்புதலை விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார். விரைவில் பயணிகள் விமான சேவைக்கும் அனுமதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!