இந்தியப் பணக்காரர்களில் ஒருவர், பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 12:06 pm

இந்திய பங்குச்சந்தையில் பெரும் முதலீட்டாளரும், இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவருமான ராகேஷ் ஜூன்சுன்வாலா 62 இன்று காலமானார்.

மும்பையை சேர்ந்தவரான ரேர் என்டர்பிரைசஸ் என்ற பங்குச்சந்தை ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் பெரும் பங்குகளை வாங்குவதில் இவருக்கு என தனி இடமுண்டு.

சமீபத்தில் ஏர்லைன் ஆகாஷா ஏர் என்ற நிறுவனத்தை துவக்கினார். சமீப காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் காலமானார். இந்தியாவில் 36வது பணக்காரர் என்ற பட்டியலில் இவர் இருந்து வந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ