இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்.. ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் பணம் வசூலித்து மோசடி..!

Author: Vignesh
13 June 2024, 3:56 pm

ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை காண்பித்து தொழிலதிபர்களை கவர்ந்து பப்பிற்கு அந்த தொழிலதிபர்களை வரவழைத்து மது அருந்த செய்து பெருமளவில் பணம் பறித்த பத்து பேர் கொண்ட கும்பலில் ஏழு பேர் கைது.

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை காண்பித்து ஹைதராபாத்தில் வசிக்கும் தொழிலதிபர்களுக்கு வலை வீசி உள்ளனர். அவர்கள் விரித்த ஆன்லைன் வலையில் சிக்கிய சபல தொழிலதிபர்களை ஹைதராபாத் மாதாப்பூரில் உள்ள மோஷ்பப்பிற்கு வரவழைத்த கும்பல் அழகான இளம் பெண்கள் மூலம் விலை உயர்ந்த மது வகைகளை அவர்களுக்கு வழங்கி குடிக்க செய்துள்ளனர்.

அப்போது அந்த சபல தொழிலதிபர்கள் நீங்கள் காண்பித்த பெண்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டபோது, முதலில் மது அருந்துங்கள். நீங்கள் கேட்ட பெண்கள் இப்போது வந்து விடுவார்கள். நீங்கள் ஜாலியாக இருப்பதற்கு தேவையான அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம் என்று கூறி சமாளித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அழகான இளம் பெண்கள் தொழிலதிபர்களுக்கு மது வழங்குவது, இளம் அழகிகள் பற்றி அவர்கள் விசாரித்த முறை ஆகியவற்றை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து கொண்ட அந்த கும்பல் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க தவறினால் உங்களுடைய இந்த செயல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டி பெருமளவில் பணம் வசூலித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்க பதிவு செய்த மாதாப்பூர் போலீசார் அழகிகளின் படங்களை காண்பித்து அழகான இளம் பெண்கள் மூலம் மது பரிமாறி பெரும்பணம் பறித்த பத்து பேர் கொண்ட கும்பலில் ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தவிர இந்த வழக்கில் தொடர்புடைய பெண்களையும் போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்