இந்தியாவை சொந்தம் கொண்டாட திராவிடர்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் மட்டுமே தகுதி : ஓவைசி பேச்சால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 9:22 pm

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்ஏ.ஐ.எம்.ஐ.எம்.,, கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, இந்தியா என்னுடையது அல்ல. அதுபோல, தாக்கரேக்களுக்கோ, மோடி-ஷாக்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தியா யாருக்கு சொந்தம் என்றால், அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான்.

முகலாயர்களுக்கு பின்னர் தான் பா.ஜ.க, – ஆர்.எஸ்.எஸ்., வந்தன. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது.

சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் மோடியை சந்தித்த தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், நவாய் மாலிக்கிற்காக ஏன் பிரதமரை சந்திக்கவில்லை?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!