உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’: 218 பேருடன் டெல்லிக்கு புறப்பட்டது 9வது விமானம்..!!

Author: Rajesh
1 March 2022, 8:55 am

புதுடெல்லி: ஆபரேஷன் கங்காவின் மூலம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இதுகுறித்த, அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. நேற்று காலையில் 249 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

இதைத்தொடர்ந்து ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6வது விமானம் மாலை சுமார் 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…