காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் பதவியை மத்திய அரசு நியமிக்க எதிர்ப்பு : உச்சநீதிமன்றம் கதவை தட்டிய காங்கிரஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 11:57 am

காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் பதவியை மத்திய அரசு நியமிக்க எதிர்ப்பு : உச்சநீதிமன்றம் கதவை தட்டிய காங்கிரஸ்!

3 தேர்தல் ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதனால் அப்பதவி காலியாக உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு பதவிக்கும் தலா 5 பேரின் பெயர்களை சட்ட அமைச்சர் ரிஜூன் ராம் மேக்வால் தலைமையிலான தேடுதல் குழு பரிந்துரை செய்யும்.

இந்த பட்டியலில் இருந்தும் தலா ஒருவரை பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. தேர்வுக்குழு வரும் 15ஆம் தேதி கூடி தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், 2 தேர்தல் ஆணையர்களை அரசாங்கம் நியமிப்பதற்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரை செய்யும் நபர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த உத்தரவை ஜெயா தாகூர் தனது மனுவில் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த உத்தரவின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி உத்தரவிடவேண்டும் என்றும் ஜெயா தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!