திருப்பதிக்கு வந்த பாஜக தலைவருக்கு எதிர்ப்பு… காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2023, 3:47 pm

திருப்பதிக்கு வந்த பாஜக தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மதுபான ஊழலில் துணை முதல்வர் மனீஷ் சிஷோடியா கைதை கண்டித்து திருப்பதியில் மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜை வழிமறித்து ஆம் ஆத்மி போராட்டம்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அம் மாநில துணை முதல்வர் மனீஷ் சிஷோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று திருப்பதியில் சுற்றுப்பயணம் கொண்ட ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜ் வாகனத்தை ஆம் ஆத்மி தொண்டர்கள் வழிமறித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது டெல்லி துணை முதல்வரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் அங்கு ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே சிறு அளவிலான மோதல் ஏற்பட்டது. அப்போது சோமவீரராஜூ வாகனம் அங்கிருந்து சென்று விட்டது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?