கட்சிக்குள்ளேயே அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு… 11 எம்எல்ஏக்கள் முதலமைச்சருக்கு எழுதிய அவசர கடிதத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 6:25 pm

கர்நாடகா மாநிலம் குல்பர்கா காங்கிரஸ் எம்எல்ஏ பிஆர் பாட்டீல் உள்பட 10 எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ”மக்களின் நமபிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களால் பணி செய்ய முடியவில்லை. 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எங்களது சட்டமன்ற தொகுதி பணிகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர்.

இத்துடன் பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை. மூன்றாவது நபரின் உதவியுடன்தான் சந்திக்க வேண்டியது இருக்கிறது. இதனால் மக்களின் ஆசைகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. மூன்றாவது நபரின் வாயிலாக எங்களுக்கு அமைச்சர்கள் செய்திகளை பகிருகின்றனர். நிதி திட்டங்களை அமைச்சர்களுடன் பகிர முடியவில்லை. உள்ளூர் எம்எல்ஏக்களாக இருந்தும், மூன்றாவது நபரின் வாயிலாக அமைச்சர்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது என்பது பெரிய ஏமாற்றமாக எங்களுக்கு இருக்கிறது.

அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான எங்களின் பரிந்துரை கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. முதல்வர் அவசரமாக தலையிட்டு இந்த சிக்கலை தீர்த்து வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்தலில், 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்று இருந்தார். முதல்வருக்கு 11 எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி இருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவுக்கு, ‘முதல்வரை எப்படி இறக்குவது அல்லது வீழ்த்துவது’ என்று எனக்கு தெரியும் என, சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் சவால் விடுத்து இருந்த நிலையில் தற்போது இந்த சிக்கலும் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 293

    0

    0