கேரளாவில் இயல்பு வாழ்க்கையை முடக்கும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்…அடுத்த 2 நாட்களுக்கு எச்சரிக்கை..!!

Author: Rajesh
19 May 2022, 3:27 pm

கோழிக்கோடு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும், அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், கணித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதை கருத்தில் கொண்டும், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு நாள் முன்பு பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

மழை குறையும் வரை மக்கள் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளுக்கும், கடல் அலைகள் அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட ஐந்து நாட்களுக்கு முன்னதாக, மே 27ம் தேதிக்குள் முதல் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்