தமிழக கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை… டெல்லியில் செய்த தரமான சம்பவம் ; உச்சி குளிர்ந்த பாஜக தலைமை…!!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 1:53 pm

சென்னை ; தமிழகத்தைச் சேர்ந்த மாற்று கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பி டெல்லியில் பாஜகவில் இணைந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளையும், தேமுதிக 6 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மாற்றுக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளும் உடன் சென்றனர். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த வடிவேல் (கரூர்), சேலஞ்சர் துரை (கோவை), கந்தசாமி (அரவக்குறிச்சி), ரத்தினம் (பொள்ளாச்சி), சின்னசாமி (சிங்காநல்லூர்), ஜெயராமன் (தேனி), வாசன் (வேடச்சந்தூர்), அருள் (புவனகிரி), ராஜேந்திரன் (காட்டுமன்னார் கோவில்), செல்வி முருகேசன் (காங்கேயம்), ரோகிணி (கொளத்தூர்), வெங்கடாச்சலம் (சேலம்), முத்து கிருஷ்ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

அதேபோல, திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கோமதி சீனிவாசன், திமுக முன்னாள் எம்பி குழந்தைவேலு மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தங்கராஜு ஆகியோர் பாஜகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 366

    0

    0