100 முறை பிரதமராகுங்கள்.. எங்கள் கவலையே மக்கள்தான் : அதிர வைத்த காங்., எம்.பி அதிர் ரஞ்சனுக்கு அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 9:31 pm

100 முறை பிரமராகுங்கள்.. எங்கள் கவலையே மக்கள்தான் : அதிர வைத்த காங்., எம்.பி அதிர் ரஞ்சனுக்கு அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர்!!

அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோஷி குற்றம் சாட்டினார்.

இதனால், அதிர் ரஞ்சன் மீதான குற்றச்சாட்டை உரிமை குழுவுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், உரிமை குழு அதன் மீது முடிவெடுக்கும் வரை அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்நிலையில், ஜோஷி குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?