ஒவைசி சென்ற கார் மீது துப்பாக்கி சூடு… அடுத்தடுத்து குண்டுகள் பாய்ந்ததால் பதற்றம் : தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று திரும்பிய போது நிகழ்வு!!.

Author: kavin kumar
3 February 2022, 7:43 pm

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அசாதுதீன் ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, 4 பேர் திடீரென கார் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

அதன்பின் துப்பாக்கியை வைத்துவிட்டு தப்பி ஓடினர். இதில் ஓவைசிக்கு எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து ஓவைசி கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தின் மேற்கில் உள்ள ஹப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பினேன். அப்போது, டெல்லி டோல் பிளாசா அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி